நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Friday, October 24, 2008

ஐப்பசி ஸ்பெஷல் அடைமழையா...அஸ்வினிதேவர்களா... காஸ் சிலிண்டர் தட்டுப்பாடா!!!?









என்னத்த சொல்லங்க ஊரெல்லாம் அடைமழை ; சைக்கிள் கேப்புல அடைமழை பத்தி ஒரு மேட்டர் சொல்லிக்கறேன் ... அது இன்னானா "ஐப்பசி அடைமழை " பழமொழி இருக்கில்ல இந்த ஐப்பசி மாசம் வருஷத்துல ஏழாவது மாசமா வருதுங்க . ஏழாம் நம்பர் அஸ்வினி தேவர்களைக் குறிக்குதாம் ...அதாகப் பட்டது என்னவெனில் ?
சிறு குறிப்பு :
சூரிய புத்திரர்களாகக் கருதப் படும் இந்த அஸ்வினி குமாரர்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் இரட்டையர்கள் .மஹாபாரதத்தில் பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதுரி இந்த அஸ்வினி தேவர்களை பிள்ளை வரம் வேண்டிப் பிறகு பிறந்தவர்களே நகுலனும் ,சகாதேவனும் ...இருவரில் சகாதேவன் சோதிடத்திலும் நகுலன் குதிரைகளைப் பழக்குவதிலும் வல்லவர்கள் . அஸ்வினி புத்திரர்கலானதினாலேயே இவர்களுக்கு இந்தக் கலைகள் கை வந்தன என்கிறது இதிகாசமும் புராணமும் .
இந்த அஸ்வினி தேவர்கள் தம் தந்தையார் சூரிய பகவானின் பனிரெண்டு குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டும் சாரதிகளாகவும் இருப்பார்களாம் , இவர்களது பெயரால் ஐப்பசி மாதம் சமஸ்கிருத மொழியில் குறிக்கப் பெறுகிறது . சமஸ்கிருதத்தில் அஸ்வினா என்றால் தமிழில் ஐப்பசி என்கிறோம் . யாகங்கள் நடைபெறுகையில் அஸ்வினி தேவர்கள் வணங்கப் படுவதாக ரிக் வேதம் கூறுகிறது . அதோடு எனக்குத் தெரிந்த இன்னொரு செய்தி என்னவென்றால் இந்த அஸ்வினி குமாரர்கள் எந்நேரமும் உலகைச் சுற்றிக் கொண்டே இருப்பார்களாம் (அப்பா சூரியனாருக்கு தேர் ஒட்டியது போக...மாதுரிக்கு குழந்தை வரம் கொடுத்து பிறகும் எஞ்சிய நேரங்களில் ) சுற்றிக் கொண்டே இருப்பார்களாம் ;
அப்படி அவர்கள் நம்மில் யாரோ ஒருவரின் அருகில் வருகையில் நாம் என்ன மனதில் நினைக்கிறோமோ அது அப்படியே பலிக்கட்டும் என்று ஆஷிர்வதித்து (அதாவது நாம் நல்லது நினைத்தாலும் சரி கெட்டதும் நினைத்தாலும் சரி எதுவானாலும் நன்றாகக் கவனியுங்கள் கெட்டதும் கூடப் பலிக்கட்டும் என்று பாரபட்ச்சமின்றி ஆஷிர்வாதம் அளித்து விட்டுப் போய் விடுவார்களாம் !!!
இதை சமஸ்கிருதம் மிக எளிதாக "ததாஸ்து " என்று சொல்கிறது அதாவது "அப்படியே ஆகட்டும் "என்று பொருள் கொள்ளலாம் .
(இது வரமா ..சாபமா ...மண்டை கொடைச்சலாள்ள இருக்கு )
நல்லதை மட்டுமே எந்நேரமும் நினைச்சுட்டு இருக்க முடியுமா பிரதர் ?!
சிலநேரம் பக்கத்து வீட்டு பரசுராமன் பைக் எப்படா காணாமப் போகும் நு இருக்கும் ...!!!(அதெல்லாம் பலிக்குதா என்ன ? .....கொஞ்சூண்டாச்சும் பலிச்சிருக்குமோ ?
சரி மேட்டருக்கு வருவோம் ,
ஒண்ணுமில்ல இந்த அடைமழைல மின்வெட்டு ரொம்பப் பெரிய பிரச்சினையே இல்லைங்கற மாதிரி வீட்ல ஒரு விஷயம் நடந்து போச்சு .
எப்பவும் புக் பண்ணி ஒரு வாரத்துலயோ இல்ல ரெண்டுவாரத்துலயோ டெலிவரி
ஆகற காஸ் சிலிண்டர் இந்த தடவை இருபது நாளாகியும் வரலை ,என்னான்னு போன் போட்ட "பழுதடைந்துள்ளது ...உபயோகத்தில் இல்லை ..நம்பர் பிஸி ...இதாங்க வருது சிலிண்டரை மட்டும் காணோம் ,சரின்னு நேர்ல போனா ஒரு அம்மா உட்கார்ந்துகிட்டு "என்னங்க பண்றது சப்ளை வந்ததும் போடறோம் ,இன்னைக்கு வந்தா இன்னைக்கே போட்ருவோம் ,இல்லனா இன்னும் ரெண்டு நாள் லேட் ஆகும்னு ஈசியா சொல்றாங்க(அவுங்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடே வராது போல!!! ) ஏஜென்சி மூலமா ஒரு சிலிண்டர் விலை (முன்னூத்து நாப்பத்தி அஞ்சு ரூபாய் )
கடைசில ப்ளாக்ல அறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கினோம் .
என்ன பண்ண தீபா.........வ ...ளி(லி )யாச்சே ?!
கெரசின் பத்தி பேச்சே வேணாம் (பிச்சிபுடுவேன் பிச்சி ...)
லிட்டர் -முப்பத்து அஞ்சுல இருந்து அம்பது அருவதுனு இஷ்டத்துக்கு விக்கிராங்கப்பா ..என்னத்த சொல்ல ?
ஐப்பசி அடைமழைக்கு மட்டும் இல்லை போல அஸ்வினி தேவர்களுக்கும் ...காஸ் சிலிண்டர் தட்டுப்பாடுக்கும் கூட ஸ்பெஷல் தான் போல ?!!! ஐப்பசி அடைமழை சரி ...கார்த்திகை கனமழையாமே !!!
திருவாளர்.பொதுஜனங்களே உங்கள் சமத்து எதுக்கும் பாத்து யூஸ் பண்ணுங்க காஸ் சிலிண்டரையும் ...கெரசினையும்

Wednesday, October 22, 2008

ஸ்ட்ராபெர்ரி தெரியும் அதென்ன கிரேன்பெர்ரி ?

இதுவும் ஸ்ட்ராபெர்ரி போல ஒரு பழ வகை தான் , இங்கே இந்தியாவில் இது நிறையக் கிடைக்குமா என்ன என்பதெல்லாம் தெரியவில்லை ,ஆனால் "பெரும்பாலும் பெண்களுக்கு வரும் "சிஸ்டைடிஸ்" எனும் உபாதைக்கு இது ஒரு மிகச் சிறந்த நிவாரணி என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது .இதை ஜூஸ் செய்தும் குடிக்கலாம் ...மாத்திரை பட்டைகளாகவும் கிடைக்கும் .சிஸ்டைடிஸ் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை ...ஆண்களும் பாதிக்கப் படலாம் , எல்லா வயதினரையும் ithu தாக்கலாம் .பெரும்பாலும் பெண்கள் இருபது முதல் ஐம்பத்து வயது வரை இதனால் பாதிக்கப் படுகின்றனர் .ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் அளவற்ற எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது அடிவயிற்றில் வலி இருந்தாலோ ...கலங்கலான நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டாலோ ...சிறுநீருடன் ரத்தம் கலந்து வந்தாலோ , அல்லது இந்த அறிகுறிகளுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அவஸ்தை ஏற்பட்டாலோ ஒருவர் ஆணோ அல்லது பெண்ணோ சிஸ்டைடிஸ் உபாதையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம் .இந்நோய் பெரும்பாலும் இ . கோலி எனும் பாக்டீரியாவால் தான் பரப்பப்படுகிரதாம் . இது சிறுகுடல் பகுதியில் காணப்படும் . பெரும்பாலும் சுத்தமின்மை காரணமாகவும் , உடலில் ஏற்ப்படும் நீர் இழப்பின் காரணமாகவுமே இந்த பாக்டீரியா உடலில் கிட்னி கும் கூடப் பரவ வாய்ப்பு ஏற்படலாம் . சரி...சரி .இப்படியே நீட்டிக் கொண்டு இன்னும் பத்துப் பக்கங்கள் கூட எழுதலாம் தான் ... கிரான்பெர்ரி என்ற பெயர் புதிதாக இருக்கிறதே என்று நெட்டில் தேடினால் இப்படி ஒரு பயனுள்ள விஷயம் சிக்கியது .இந்தப் பழங்களில் சிட்ரிக் அமிலம் அபிரிமிதமாக இருப்பதால் இது இந்த உபாதையைத் தீர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது அவ்வளவு தான் மேட்டர் !!!கிரேன் பெர்ரி கிடைத்தால் சரி தான் .

" விளையும் பயிர் முளையிலே "

டைணிங் ஹாலில் உட்கார்ந்திருந்த குழந்தை அஷ்விதாவைக் கண்டதும் ஜன்னல் மேல் தாவி ஏறிக்கொண்டது , ஏய் மேல ஏறாத விழுந்து வைக்கப் போற பதட்டமாய் அவள் கத்தினாள் .

சரி ..சரி இரு நீ கிட்ட வராத நானே இறங்கிடறேன் ...குழந்தை அவளே இறங்கி வந்து படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டாள்,


பாப்பா பப்பு மும்மு டா சூப்பர் டேஸ்ட்...ஒரு வாய் சாப்டுப் பார் அப்புறம் நீயா வேணும் ...வேணும்ப, வா வந்து வாங்கிக்கோ என் செல்லக்குட்டி இல்ல !

அஷ்விதா படுக்கை அறைக்கு வந்ததும் குழந்தை அவள் எட்டிப் பிடிக்க முடியாதபடி வழுக்கிக் கொண்டு பின்வாசலுக்கு ஓடினாள்.ஹை..உங்கைல தான் மம்மு பிளேட் இருக்கே ..என்ன எப்படி நீ பிடிப்ப ? தள்ளி நின்று கொண்டு எக்காளமாய் சிரித்தது.

சரி..சரி விளையாண்டது போதும் வா ..வந்து "ஆ " வாங்கிக்கோ அப்போ தான் ஈவினிங் பார்க் கூட்டிட்டுப் போவேனாம் ; உள்ளே வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டு சமாளிப்பாய் கெஞ்சினாள்,

பார்க் எல்லாம் வேண்டாம் "அபிராமிக்குப் போலாம் இன்னைக்கு " அப்போ தான் நான் "ஆ " வாங்கிக்குவேன் ,அபிராமிக்கா ..!!! OK ..OK பாப்பு என்ன சொல்றாளோ அங்கேயே போலாம் ,

நீ பஸ்ட் சாப்பிட்டு முடி அப்புறம் டைம் ஆயிடும்ல மூடிடுவாங்க இல்ல ?இரு மம்மி வரேன் ..குழந்தை இப்போது பாத்ரூம் பக்கம் போய் விட்டாள் .பாப்பு பாத்ரூம்குள்ள சும்மா ..சும்மா போக கூடாது நு எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன் ,

பேட் ஹாபிட் கால் வாஷ் பண்ணிட்டு வெளிய வா ,கையில் சாதம் ஏந்தியவாறு அஷ்விதா குரலில் லேசாக கடுமை ஏற்றிக் கூறினாள்.அதிகம் கத்தக் கூடாதே ..உள்ளதும் போன கதையாகி விடுமே ,

எப்படியாவது பாப்புவை சாப்பிட வைக்கவேண்டும் , காரியம் ஆக வேண்டுமே .

ஆம் !!!

அஷ்விதா குழந்தைக்கு சாதம் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள் , சும்மா பத்து நிமிஷ வேலை என்று நினைத்து விடாதீர்கள் ...ஒரு மணி நேரமாக ஊ ...ட்..டிக் கொண் ..டே ..இருக்கிறாள் ,

அவளும் என்னென்னவோ சொல்லி குழந்தையை ஏமாற்றி சேர்ந்தாற்போல ஒரு ரெண்டு பிடி சாதத்தையாவது வாய்க்குள் தள்ளி விடலாமென்று தான் பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்க்கிறாள் .


பாத்ரூமில் இருந்து வெளியே வந்த குழந்தை இவளது நல்ல நேரமோ என்னவோ அவள் மடியில் வந்து பாசமாய் உட்கார்ந்து கொண்டது ,உச்சி குளிர்ந்து போனவளாய்,


என் தங்கமாச்சே ...என் அம்முக்குட்டியில்ல என் செல்ல புஜ்ஜியில்ல..தங்கக் கட்டியில்ல "ஆ " காட்டும்மா ...ஒரே ஒரு வாய் தான் அப்புறம் மம்மி (சாரி பாஸ் எகிப்த் மம்மி இல்ல இது தமிழ் மம்மி ) உன்ன சாப்பிடச் சொல்லி தொந்திரவே பண்ண மாட்டேனாம் ;


அதுவரை மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை மெல்ல நழுவி சோபாவுக்குச் சென்றது ; இரு மம்மி சாப்பிடறேன் ...வெயிட் ...வெயிட் கையால் சைகை காட்டிவிட்டு ,


ரைஸ் எதுக்கு சாப்பிடனும் ? நூடுல்ஸ் தா அதான் வேணும் ,அஷ்விதா முறைத்தாள்;முன்னாடியே சொல்றதுக்கென்ன ஒரு மணி நேரமா உன் பின்னாடி தான அலையறேன் ?


கோச்சுக்காத மம்மி நூடுல்ஸ் தா சாப்பிடறேன் ...என் செல்ல மம்மி இல்ல !!!உள்ளெழுந்த அத்தனைக் கோபத்தையும் காட்டினால் காரியம் சுத்தமாய்க் கேட்டு விடுமே ,ஐந்தே நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரித்துக் கொண்டு குழந்தையை தேடினால் காணோம் .


பாப்பு வேர் ஆர் யு ? டெல் மீ ...


அஷ்விதா வீடு முழுதும் தேடி கடைசியில் பூஜை ரூம் கதவு மூலையில் பாப்புவைக் கண்டுபிடித்து இழுத்து வந்து மறுபடி டைணிங் ஹால் மேஜையில் அமர வைப்பதற்குள் போதும் ..போதும் என்று வந்தது அவளுக்கு ,


நூடுல்ஸ் ரெடி போர்க் வச்சு நீயா சாப்பிடுவயாம் ,மம்மி சும்மா உட்கார்ந்து பாப்பு சாப்பிடறத பார்த்துட்டே இருந்து பினிஷ் பண்ணதும் வெரி குட் சொல்வேனாம் ..ஒ.கே வா ?


என்ன நினைத்தாலோ என்னவோ ஒரே ஒரு வாய் நூடுல்ஸ் எடுத்து போர்க்கால் வாயிலிட்ட பாப்பு "ஓ என்று தனக்குத் தானே உமட்டிக் கொண்டு மறுபடி போர்க்கை கீழே போட்டு விட்டாள் .


மம்மி வாமிட் வருது மம்மி நூடுல்ஸ் இப்போ வேணாம்..அப்புறமா சாப்டுக்கறேன் .என்றாள் . ஏய் என்னடி இது சாதம் தான் வேண்டாம்ன சரி நூடுல்ஸ் கேட்டஎனு செஞ்சு எடுத்துட்டு வந்த இதுவும் வேணாம்கற ...எத தான் சாப்டப் போற நீ ?


இப்ப ஏதாவது ஒன்னு சாப்பிடப் போறிய.. இல்ல பூதத்தைக் கூப்பிடவா ?கேட்ட மாத்திரத்தில் பாப்பு அஷ்விதாவின் சேலை நுனியை இறுகப் பற்றிக் கொண்டு தனது அச்சத்தை காட்ட ;குழந்தை கொஞ்சம் பயந்தமாதிரி இருக்கிறதே ..அது தான் சாக்கென்று ;


நிஜமாதான் சொல்றேன் இப்போ நீ மட்டும் சாப்பிடலை , கலர் ..கலர் பூதம் (ஹி...ஹி ஏதாவது ஒரு பேர் வேண்டுமே பூதத்துக்கு ) வந்து உன்னைத் தூக்கி பைல போட்டிக்கிட்டு ஓடியே போய்டும் ,


பாப்பு கொஞ்ச நேரம் அமைதி காத்தாள். ஒரே ஒரு நிமிஷம் தான் . அப்புறம் கேட்டாள்.


எங்கம்மா போகும் பைல போட்டுத் தூக்கிட்டு ?


ஹ்ம்ம் ...அபிராமிக்கு ..எங்க போகும் எங்கயாச்சும் காட்டுல கொண்டு போய் போட்டுட்டுப் போய்டும் .


ஆமாம் ...பேசாம சாப்டுறு , அஷ்விதா மேலும் கொஞ்சம் பயம் ஏற்றிப் பார்த்தாள்...எல்லாம் அவளை சாப்பிட வைக்கத் தான் ;


பாப்புவா கொக்கா ?!!!


ம்ம்ம் ...மம்மி கலர் கலர் பூதம் தான சொன்ன ?


ஆமாம் பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்கும் ...வந்திரப் போகுது சீக்கிரம் சாப்டுறு பாப்பு ;


அதில்லம்மா அந்த பூதம் வரும்போது எந்த கலர் ல வரும் ?


நீ இப்படியே கேட்டுக்கிட்டே இரு பூதம் வந்து சாப்பிடாத பிள்ளை எங்க.. எங்க நு தேடி உன்னைப் பிடிச்சி பைல போட்டுக் காட்டித் தூக்கிட்டுப் போயடட்டும் ;


இன்னும் இறுக்கமாக அஷ்விதாவின் சேலையைப் பற்றிக் கொண்டு ஒடுங்கி மடியில் அமர்ந்து கொண்டு சேலை தலைப்பால் தன்னை மூடிக் கொண்ட பாப்பு ;


மம்மி பிங்க் கலர் ... ப்ளூ கலர் கூட அந்த பூதம் வருமா மம்மி ? என்றாள்


வரும்..வரும் ;இப்ப வரத்தான் போகுது நீ சாபிடாமலே இருக்க இல்ல இதோ வந்திரும் பாரு .


கேட்டுக்கொண்டிருந்த பாப்புவின் கண்களில் இப்போது பயம் போய் மெல்லக் கண்கள் பளிச்சிட ,


மம்மி ..மம்மி ப்ளீஸ் மம்மி அந்த பூதத்தை பிங்க் கலர்ல வரச் சொல்லு மம்மி;வேற கலர் வேணாம் .


பிங்க் இல்லன ப்ளூ ஓ.கே ,வரச் சொல்லு மம்மி .


என்னது ?


ங்ஹே வென்று ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு பாப்புவுக்குப் பிசைந்த சாதத்தை அஷ்விதாவே சாப்பிட்டு முடித்தாள் .


வேறு வழியில்லையே !!! .


"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று


குற்றம் குறை காணாத இனத்தால் ஒன்று ".


கே.டிவி யில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது .

Tuesday, October 21, 2008

பகிர்வு - ஈழம்

புதுசு கண்ணா புதுசுன்னு நிறையப் பேர் ப்ளாக்ல எழுதித் தள்ராங்கப்பா; நல்லாத்தான் இருக்கு ,உட்கார்ந்து யோசிப்பாங்க போல ...கொஞ்ச நேரம் முன்னாடி ஈழம் தமிழ் எம்.பி பிரேம் ராமச்சந்திரனோட இன்டெர்வியூ படிச்சேன் . என்ன பாவம் செஞ்சாங்கப்பா ஈழத்து தமிழ் மக்கள் , ஐரோப்பிய தொண்டு நிறுவனங்களை சிங்கள அரசு விரட்டின பிறகு செஞ்சிலுவைச் சங்கமும் இறந்தவர்களை அப்புறப் படுத்தும் பணிகளை மட்டும் தான் இப்போதைக்கு செய்துட்டு வருதாம் , அந்த மக்களோட ரணங்களுக்கு மருந்து போடப் போறது தான் யாரு ? நம்ம அரசியல்வாதிகள் திடீர் ஸ்டண்ட் அடிக்கறதோட சரி , ஈழத் தமிழர்கள் பத்தி பத்திரிகைகள்ல வர்ற ஒவ்வொரு படமுமே பகீர் ராகம் தான் ...கொஞ்ச நாள் முன்னாடி நோபெல் பரிசு பெற்ற ஒரு ஐரோப்பிய புகைப்படக்காரரோட புகழ் பெற்ற புகைப்படம் ஒன்றை பார்த்தேன் .

அது சூடானின் இரக்கமற்ற வறுமையை ...பஞ்சத்தை அப்பட்டமா காட்டுகிற நிஜம் . இந்தப் புகைப்படம் எடுத்து பரிசு பெற்றதுக்கு அப்புறம் அவருக்கு வாழ்க்கை மேல ஒரு பிடிப்பே இல்லாம பொய் தற்கொலை பண்ணிகிட்டாராம் .


பசியால் வாடிப் பொய் குற்றுயிராகி விட்ட ஒரு சிறுவன் வெறும் நிலத்தில் நடக்கக் கூட முடியாம மண்டியிட்டு கவிழ்ந்து கிடக்க ,அவன் எப்போதடா சாவான் அவனை இரையாக்கிக் கொள்ளலாம் என ஒரு வல்லூறு அவனுக்குப் பின்னால் காத்திருக்கிறது . இது தான் அந்தப் புகைப்படம் , இதைக் கண்டவுடன் யாருக்குமே பதட்டம் வரத்தான் செய்யும் .


இதே உணர்வை இப்போது வெளிவரும் ஈழத்துப் புகைபடங்களும் எழுப்புகின்றன,


"என்று தணியுமிந்த போர் வெறி


என்று நிமிர்வர் எம் ஈழத் தமிழர்கள் ?!"


விடை தெரியாக் கேள்வி என்று தெரிந்தே தான் என்னைப் போல பலரும் கேட்டுக் கொள்கிறோம் எங்களுக்குள்ளே .


எல்லாப் பயணங்களும்...






எல்லா பயணங்களும்


கீழிருந்தே துவங்குகின்றன ...


மேலே செல்லச் செல்ல


தொடரும் வால் போல


நீளும் ஏணிப்படிகள்


படிப்படியாய் தயங்கி


அவ்விடத்தே நிலைத்துவிட


பயணங்கள்


என்றென்றும் துவங்கித் தொடர்கின்றன ...


பயணிகள்


மாறலாம்


பயணங்கள் மாறுவதில்லை


எல்லாப் பயணங்களும்


கீழிருந்தே துவங்கித் தொடர்கின்றனவாம் ...!!!
கயல்

Monday, October 20, 2008

சைக்கிள்






ஐம்பது காசு இருந்தால் போதும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டலாம் . அம்மா தர வேண்டுமே ! நேற்று தான் அப்பாவிடம் வாங்கினோம் ,அதற்கும் முந்தைய நாள் அத்தையிடம் ... இன்று யாரிடம் கேட்கலாம் ?!;


விஜயலுவின் மனம் பர பரவென்று யோசித்தவாறு சைக்கிள் கடை முன்பாகவே சுற்றிக் கொண்டிருந்தது .தினம் ஒரு ஐம்பது காசு கொடுத்தால் இவர்களென்ன குறைந்த போய்விடுவார்கள் ,நினைக்கும் போதே தன் நெஞ்சம் தன்னை சுட்டது ,காலை முதல் எத்தனை ஐம்பது காசுகள் வாங்கிச் செலவழித்தாகிவிட்டது ,இப்போது போய் கேட்டால் யார் தரப் போகிறார்கள் ?யோசிக்கும் போதே மஞ்சள் நிற பெயிண்ட் அடித்த அரை சைக்கிள் ஐ மோகனப் பிரியா எடுத்துக் கொண்டிருந்தாள் .


போன வாரம் வரை கேட்டால் ஒரு ரவுண்டு ஓட்ட தருவாள் தான் .இன்றைக்கு சைக்கிள் கடை முன்னால் விஜயலுவைப் பார்த்ததுமே கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக் காட்டி விட்டல்லவா குரோதத்துடன் போகிறாள் .


முந்தா நாள் சமூகவியல் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது ராமு வாத்தியார் எப்போதும் போல் கேள்வி கேட்டார் , பதில் தெரிந்தவர்கள் சொல்லி விட்டு தெரியாதவர்களின் முதுகில் குனிய வைத்து குத்துவது அந்த வகுப்பின் மரபு .அப்படித்தான் அன்று விஜயலு பதில் சொன்னதும் மோகனப் ப்ரியாவை குனிய வைத்து கொஞ்சம் பலமாக குத்தி விட்டாள்...அதிலிருந்து அவள் இவளுக்கு சைக்கிள் மட்டுமல்ல வேறு எதுவும் தர மாட்டேனென்று விட்டாள் ...


கொய்யாப் பழம் ...


பலாக்கொட்டை ...


மாம்பழக் கீத்து ...


நாவல் பழம் ...


இலந்தைப் பழம் ....


எதுவுமே தான் !


இவளிடம் போய் சைக்கிள் கேட்டு அவமானப் படுவதா ?


நிச்ச்சயம் அவள் சும்மா தொட்டுப் பார்க்கக் கூட விட மாட்டாள் ...கூட இருக்கும் அவள் கூட்டாளிகள் இருக்கிறார்களே பிசாசுகள் ...சரியான பேய்க்குட்டிகள்..!


சைக்கிள் வேண்டுமே ஓட்ட !இப்போது என்ன தான் செய்வது ?சைக்கிள் பைத்தியம் பிடித்து ஆட்டுதுடீ உன்ன ;அக்கா அடிக்கடி வீட்டில் மாட்டி விட ஆரம்பித்து விட்டாள் .


அம்மா அவளுக்கு காசா தராத சைக்கிள் கடைல தான் எந்நேரமும் கிடக்கா ...பேசாம சேவு ...சீனி முட்டாய் ...மரவள்ளிக் கிழங்கு எதாச்சும் வாங்கி குடு ...இல்லாட்டி சைக்கிள் ல அழுதுட்டு என்கிட்டே பங்கு கேட்பா ;அக்காவை அறையனும் போல இருக்கும் அந்நேரம் ;


அந்த ரோஸ் நிற நடுக்கம்பியிட்ட சைக்கிள் இருகிறதே அது தான் விஜயலுவின் செல்ல வண்டி .சைக்கிள் கடை பரமு அண்ணாச்சியிடம் எத்தனையோ தடவை அதை யாருக்கும் தராதிங்க அண்ணே என்று சொல்லி இருக்கிறாள் .அந்த நேரம் சரி சரி என்று போக்கு காட்டி விட்டு அடுத்த நொடியே யார் வந்து கேட்டாலும் காசுக்கு பேதமின்றி எல்லா சைக்கிள் லும் வாடகைக்குத் தருவார் சைக்கிள் கடை பரமு.


அந்த ரோஸ் நிற சைக்கிள் இன்று இன்னமும் யாரிடமும் போகவில்லை ...அதை எடுத்தே ஆகவேண்டும் என்று தான் பரபரப்பாய் யோசித்துக் கொண்டு இருந்தாள் விஜயலு ,சைக்கிள் லில் அப்படி என்ன தான் கண்டாலோ ?"ஆன்ட பிடகு ஏமிசே சைக்கிள் லு "அக்கா கத்துவாள் .


பஸ் ஸ்டாண்டில் தான் சைக்கிள் கடை ,


யாராவது சொந்தக்காரர்கள் வந்து அடுத்த பஸ்ஸில் இறங்க மாட்டார்களா காசு கிடைக்குமே சைக்கிள் விட !


சித்திக்கு என்ன கேடு பக்கத்து ஊர் தானே ? வந்தால் என்ன?


அத்தை மதுரையில் இருக்கிறாள் ...ஆனாலும் அவசரத்திற்கு வரலாம் ...வந்தால் என்ன கெட்டு விடும் ?


மாமா கோயம்பத்தூரில் இருந்தால் என்னவாம் இப்போது வந்து தொலைப்பதற்கு என்ன?


எங்கோ ஒழிந்து போய்விட்டார்கள் இந்த சொந்தக்காரர்கள் எல்லோரும் ஒரேநாளில் !!!


விஜயலுவுக்கு மெல்ல அழுகை வரப் பார்த்தது .சொந்தக்காரர்களை நினைத்ததெல்லாம் இல்லை .


அந்த ரோஸ் நிற கம்பி சைக்கிள் இருக்கிறதே அதை ஒரு பையன் ஸ்டாண்டை விட்டு வெளியே தள்ளிக் கொண்டு இருந்தான் .அது விஜயலுவின் செல்ல வண்டி ஆயிற்றே !!!யார் அந்தப் பையன் ?


ஊர் மந்தைப் வேப்ப மரப் பிள்ளையார் மீது எக்கச்சக்க கோபம் வந்தது ,ஆலமரம் இல்லாமல் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் போதே உனக்கு இவ்வளவு குசும்பு இருந்தால் ... உனக்கு இனி தோப்புக்கரணமே போடபோவதில்லை .மனதிற்குள் கருவிக் கொண்டாள்.


போயும் போயும் அந்த கோனை வாய் கொண்டால் சாமிக்கா ரோஸ் சைக்கிள் போய் சேரனும் ?எல்லாம் உன்னால் தான் பிள்ளையார் !என் ரோஸ் சைக்கிள் போச்சே !!!அவன் போகிற போக்கில் இவளைப் பார்த்து நக்கலாய் சிரித்தமாதிரி இவளை நினைத்துக் கொண்டாள் .


சேச்சே ...இனி இந்த பரமு சைக்கிள் கடைக்கே வரவே கூடாது .ஊரில் வேறு சைக்கிள் கடையா இல்லை ?ஆமாம் வேறு இல்லையே ...ஒரே ஒரு கடை தானே ஊரில் !!!


தேவையே இல்லாமல் இதுவும் ஞாபகத்துக்கு வர இல்லாவிட்டால் போய்த்தொலையட்டும் .இனி பரமு கடை எந்த திசை என்று கூட மறந்து போகணும் பிள்ளையாரப்பா ...கண்களை இருக்க மூடி சிலுவைக்குறி இட்டுக் கொண்டு வேண்டி விட்டு வீட்டை பார்த்து ஓடினாள்,


படிப்பது பாதிரிமார் பள்ளிக்கூடம் ஆச்சே!!!சிலுவை இடாவிட்டால் பிள்ளையார் கோபித்துக் கொள்ளக்கூடுமே !!!


விஜயலு மெல்ல வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள் அம்மா புறக்கடையில் பாத்திரம் தேய்க்கும் சத்தம் கேட்டது .அக்கா ஏழாம் வகுப்பு கூட்டு வட்டி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் இவளுக்கு முதுகைக் காட்டியவாறு ;


இது தான் நல்ல சமயம் யாரும் கவனிக்கவில்லை இருட்டிக் கொண்டு வேறு வந்தது ..மழைக்காலம் ஆச்சே !!!சாயந்திரம் பெட்டிகடையில் வாங்கித் தின்ற கடலை உருண்டையும் அஞ்சு காசு அப்பளமும் என்னத்திற்கு ஆகும் ?


பசி எடுக்கத் தான் செய்தது ;"எங்க போய் ஊர் சுத்திட்டு வர ?" அம்மா முதுகில் சத்து சாத்தென்று சாத்துவாளே?!பூனை போல கூடம் தாண்டி எல்லோரும் படுக்கும் இடத்தில் விரிப்பு எதுவும் இன்றியே அந்த ரோஸ் நிற சைக்கிள் ஐ நினைத்துக் கொண்டே மெல்ல ...மெல்லத் தூங்கிப் போனால் விஜயலு .

இருளின் வெளிச்சத்தில் ...

வெளிச்சத்திற்காகக்

காத்திருந்து ...


காத்திருந்து


இருள் பழகிப் போயிற்று


இருள் சுகமானது தான் !


சுதந்திரமானதும் கூடத் தான் ...


இருளின் இதமான நட்பில்


வெளிச்சம் பகையாகி போய்விடின்


என் செய்வதென்று தான்


இன்னும்


காத்திருக்கிறேன்


வெளிச்சத்திற்காக ...?!

சொந்தமெனப்படுவது யாதெனில் ?

வெறும்
வார்த்தைகளில்
வாழ்ந்து
முடிந்து போன
காலங்கள்
ஐம்பதின் பின்
சூன்யம் உமிழ்கின்றன ...
அம்மா ...
அப்பா ...
அக்கா ...
தங்கை ...
அண்ணன் ...
தம்பி...
நெருக்கங்கள் எல்லாம்
கல்யாணமான
சிலவருடங்களில்
மெல்ல
மறைய
கூட்டு உருவங்களாம்
உறவுப் படைகள்
மனைவிக்கும்
மகனுக்கும்
மகளுக்கும்
காலநீட்டிப்பு ...
மருமகன்களும்
மருமகள்களும்
மற்றுமொரு
பாசக் கயிறாய் இறுக்கிக் கொண்டதும்
வெறும் வார்த்தைகளில்
மட்டுமேனும்
வாழ்ந்தே ஆகவேண்டிய
நிர்ப்பந்தம் ...!
யாருக்கு
யார் சொந்தமோ ?
"சொந்தமெனப் படுவது யாதெனில்
யாதொன்றும் நெருக்கமிலாதொரு பந்தமோ ?!"

Sunday, October 19, 2008

நசுங்கிய நாட்கள்


சொல்லாமல்
விடப்பட்ட

வார்த்தைகளின்

கணத்தில்

நசுங்கிப் போன

ஒவ்வொரு நாளையும்

தேடிக்கொண்டு

விரைவதே

வாழ்க்கை என்றானபின்

வெற்றிடமே

எங்கும் வியாபித்து

அமிழ்த்திய

உலகம் காண் ...!!!

கயல்

Saturday, October 18, 2008

சாயங்கால மழை


ரசிப்பதற்கு
ஆட்களின்றி
நகரத்தின்
சிதிலமான
தார்சாலைகளையும்
மண்சாலைகளையும்
வித்யாசமின்றி
மூர்க்கமாய்த்
தழுவிப் பரவிச் சென்றது ...
தாமரை இலைத் தண்ணீர்
தாரில் விழுந்த மழை
ஒட்டாமல் நழுவி ஓட
மண்ணில் விழுந்தமழை
பாதம் வைத்தவர்
ஒருவர் விடாமல்
அப்பிக் கொண்டு ஒட்டி நின்றது
சாதம் பிசைந்த சாம்பாராய்
மண் மகத்தானதே !!!
விரையும் பொழுதுகளில்
விவரமாய்க் காண விருப்பமின்றி
நனைத்து மறைந்தது
சாயங்கால மழை
மறுபடியும்
வரலாம்
எப்போது வேண்டுமானாலும் !?

மணற்கொள்ளை














ஆற்றில் இறங்கியும்

அழகருக்குத்

தெரியவே இல்லை

ஆறு கொலை செய்யப்பட்டகதை

யாரிடம் கேட்பது

யோசித்தவாறே

கரை ஏறியது

அழகர்சாமியின் குதிரை !!!



கிட்டிப்புள்








ஆடிக்கொண்டிருக்கையில்


தோன்றியதே இல்லை


கிட்டிபுள்


ஒருநாள்


காணாமலே


போய்விடக்கூடுமென்று ...


விடுமுறை நாட்கள்


முடியும் வரை


தேடிக்கொண்டே இருந்து


விட்டு


ஊருக்குப் பஸ் ஏறியதும்


கண்ணில் நெருடிய


கிரிக்கெட்


மட்டை கண்டு


பற்றிக் கொண்டு வந்தது


பூனைக் கோபம் !!!



Friday, October 17, 2008

உலர்ந்தும் உலராத ஏதோ ஒரு நாள் ...!









உலராத பொழுதுகள் :-

கடற்கரையில்

உதிரும்

மணற்துகளாய்

வாழ்வின்

துயரங்களும்

என்றேனும்

உதிர்ந்தே தீரும் !

மண்

உதிர்த்து

அலை நனைக்கும்

கால்களுக்கு

துயரம்

உதிர்த்து

உலர்ந்த மனம் பெற

கடற்கரையின்

உலராத பொழுதுகளில்

நிச்சயம்

தெரிந்தே இருந்திருக்கும் ???

Thursday, October 9, 2008

தனிமை ருசியானதே !!!





தனிமையும் ருசியானதே !!!



தனிமை ருசியானதே !!!


சில நேரங்களில்


வெகு சிற்சில நேரங்களில்


என்றேனும் ஒருநாள்


ஒரே ஒரு நாள் மாத்திரம் ;


தனிமை ருசியானதே !


அடங்காத கோபம்


சீறி அடங்கும் போது


என் தவறுகளை ஆராய


தனிமை ருசியானதே !


எப்போதோ


என்றிருந்த மழை


மெதுவாய்த் துவங்கி


மிகக் கனமாய் கவிழ்ந்து


கொட்டி முழக்கும் போது


என் சுவாரஷ்யங்களை அசை போட


தனிமை ருசியானதே !


காலவரையின்றி காத்திருந்து


எதிர்பார்த்திருந்த


உன்னத வாய்ப்புகள்


போகட்டும் விடு என உதறித் தள்ளி


ஓய்ந்திருந்த


ஒரு மத்தியான பொழுதில்


அறிவிப்பின்றி


கதவைத் தட்டி உடைக்கும் போது ;


என் அதிர்ஷ்டத்தை


எனக்கு நானே


மெச்சி ரசிக்க


தனிமை ருசியானதே !


எண்ணற்ற இழப்பின் பின்னும்


என்னை நான் கண்டுணர


ஓயாமல் முயற்சிக்கும்


ஒவ்வொரு முறையும்


உடனிருந்து பற்றிக்கொள்ள


விரல்கள் தரும் எவ்வுயிரும் அருகின்றி


நட்ட நடுச் சாமத்தில்


சுவர்கோழி கத்தும்


அமானுஷ்ய வேளையிலே


திடுக்கிட்டு விழிக்கையிலே


சில்லென்று முகத்தை


உரசிப் பரவும்


இளங்காற்றை தடங்கலின்றி


அனுபவிக்க


என்றேனும்


ஒரு நாள்


ஒரே ஒரு நாள்


மாத்திரம்


தனிமை ருசியானதே !!!



கயல் கவிதைகள்

Monday, October 6, 2008

ஹம்பி







கதையின் கதை :-
ஹம்பி என்று அழைக்கப்படும் விஜயநகரத்தை கி.பி ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்து ஏழில் தொடங்கி கி.பி ஆயிரத்து நானூற்று எண்பத்து ஐந்து வரை சங்காமா வம்சத்து மன்னர்கள் ஆண்டனர் .
இவர்களில் கி.பி ஆயிரத்து நானூற்று இருபத்து இரண்டு முதல் ஆயிரத்து நானூற்று இருபத்து ஆறு வரை ஆண்ட இரண்டாம் தேவராயன் காலத்தில் விருபாசர் கோயிலுக்கென ஒரு தேர்வீதி அமைக்கப்பட்டது .அவனே அந்தத் தேர்வீதியில் முதன் முதலாக தேர்த்திருவிழாவையும் தொடங்கி வைத்தான் .அப்போது நிக்கோலா கேன்டி என்ற ஐரோப்பியப் பயணி ஹம்பியின் திருவிழாவுக்கு முதன் முதலாக வந்து கலந்து கொண்டார் என்பது வரலாறு .
அதே சமயம் கி.பி ஆயிரத்து நானூற்று எண்பத்து ஐந்த்தில் இல் சங்காமா வம்சத்தின் மூன்றாம் விருபாசனை அவனது கீழிருந்த சாளுவ நரசிம்மன் எனும் சிற்றரசன் பதவி இறக்கம் செய்தான் , பின் ஹம்பி சாளுவர்களின் வசமானது ...ஆக தேர்த்திருவிழாவையும் சங்காமர் ..சாளுவர்களுக்கிடையிலான பகைமையையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கற்ப்பனைக் கதையே இது ...
ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கி.பி பதினைந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட அந்தத் தேர்த் திருவிழா இன்றும் கூட ஹம்பியில் மார்ச் ...ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது என்பது தான் .

இடம் - ஹம்பி அல்லது விஜயநகரம்
வருடம் -கி.பி. ஆயிரத்து நானூற்று இருபத்து மூன்று
மாதம் - மார்ச்
நேரம் -அந்தி மாலைப் பொழுது

நிகோலாவுக்கு நகரெங்கும் ஒருவித நறுமணம் நிறைந்த கோலாகலம் நிரம்பி வழிவதைப் போல பிரமை ஏற்ப்பட்டது ,கூட நடந்து வந்து கொண்டிருந்த நண்பன் ஹரிஹரனிடம் மெல்லத் திரும்பினான் .
நண்பா இதென்ன வாசனை ? என் மனம் இங்கு வந்த நாள் முதல் இதில் மிகவும் லயித்து போகிறது, நீ மட்டும் உடனில்லா விட்டால் நான் இதன் ஏகாந்தத்தில் மயங்கிப் பொய் இங்கேயே இரவு முழுவதும் நின்றாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை ! இத்தனை சுகந்தமாய் இருக்கிறதே இதென்ன ஹரிஹரா ?
நிகோலாவின் ஆச்சர்யத்தைக் கண்டு மெல்ல நகைத்தஹரிஹரன் ,வேடிக்கையாக நண்பனின் முதுகில் ஓங்கிக்குத்தினான் ;
நிகோலா நீ ஐரோப்பாவிலிருந்து யாத்ரிகனாக இங்கே வந்தாலும் வந்தாய் ; எங்கள் ஹம்பியில் வான் மழை பெய்கிறதோ இல்லையோ உன்னிடமிருந்து ஒரே கேள்வி மழை தான் போ என்றான் .
ஹரிஹரன் கி.பி ஆயிரத்து நானூற்று இருபத்து இரண்டிலிருந்து இருபது ஆறு வரை ஹம்பியை ஆண்டு வந்த சங்காமா வம்சத்து மன்னன் இரண்டாம் தேவராயானின் சேனாதிபதி அப்பண்ணாவின் கடை இளவல் ,
நாளந்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயிலபோன நேரத்தில் நிகோலா எனும் வெள்ளை நண்பன் கிடைத்தான் .நிகோலா வேற்று தேசத்தவன் ஆனாலும் பாரதத்தின் தென்பகுதியில் சில காலம் தங்கி அங்குள்ள மக்களுடன் அளவளாவி அவர்களது வாழ்வுமுறைகளை தெரிந்து கொள்வதில் மிக்க ஆவலுடநிருந்தான் .
அந்த ஆவலே அவனை ஹரிஹரனின் நண்பனாக்கி இன்று ஹம்பிக்கும் அழைத்து வந்து அதன் அழகான தேர்வீதியில் லயித்துப் போய் நடக்க வைத்திருக்கிறது .நகரில் தென்படும் சிறு சிறு விஷயங்களைக் கூட கண்டு அதிசயப்பட்டு கேள்வி மேல் கேள்வியை துளைத்தெடுக்கும் நிகோலாவை புன்னகையுடன் பார்த்து விட்டு நடையைத் தொடர்ந்தான் ஹரிஹரன் ,
என்ன நண்பா , என் கேள்விக்கு நீ இன்னும் பதில் அளிக்கவேயில்லையே ; சொல் ஹரிஹரா ...இதென்ன மணம் ...மனதைக் கிறக்கும் நறுமணம் ? எங்கிருந்து தான் வருகிறது ? அதிலும் ஒவ்வொரு அந்தி மாலையிலும் என்னை ஏதோ செய்து அடிமையாகும் இந்த சுகந்தம் எதற்காகவேன்றேனும் சொல்லி விடேன் ...நிகோலா விழி மூடி நாசி நிரம்ப காற்றை உள்ளிழுத்து அனுபவித்துச் சொன்னான் .
சற்றே விஷமம் கலந்த குறும்போடு நிகோலாவை ஏறிட்டு நோக்கிய ஹரிஹரன் ,அதே வாலிப துடுக்குடன் சரி நான் ஒன்று கேட்கிறேன் , பட்டென்று பதில் சொல் பார்போம் ,
இந்த நறுமணத்தை நுகர்ந்தவுடன் உனக்கு என்னென்ன ஞாபகங்கள் வந்தனவோ உண்மை சொல் நிகோலா என்றான் .
இன்னும்...இன்னும் ...இன்னும் நன்றாக அந்தப் புகை போன்ற வாசம் நிறைந்த காற்றை மூக்கால் முடிந்தவரை நுரையீரல் முழுக்க நிரப்பி சுகானுபவமாய் கண்களை மூடியவாறு மெய் மறந்தவன் போல நிகோலா மென்குரலில் ரகசியம் போல ;
சொல்லட்டுமா ஹரிஹரா என்றான் .
வேறு என்ன ஞாபகம் ஹரிஹரா அங்கே கண்ணுக்கு எட்டாத தொலைவில் லண்டனில் எனக்காக ஒவ்வொரு விடியலிலும் எங்களது மூன்று குழந்தைகளுடனும் ...இன்னும் சற்றேனும் குறையாத காதலுடனும் காத்திருக்கும் எனது இனிய மனைவி மார்கரெட்டின் நினைவு தான் சட்டென்று மனதை இருக்குகிறது
... பின் இதமாய் தளர்ந்து பறக்கிறது ...! இது சுகமா ? சோகமா ? பிடிபடவில்லை
ஆனாலும் எதோ ஒரு இனம் புரியா சந்தோசம் உள்ளுக்குள் ததும்பி வழிந்து என்னை மூழ்கடிப்பதென்னவோ முற்றிலும் நிஜம் .எங்கேயோ பார்வை நிலைக்க நிகோலா லண்டனுக்கே போய் விட்டான் தன் நினைவுகளின் பின்னே ...
அதே தான் நிகோலா ;கடல் கடந்தும் இந்த நறுமணம் உன் மனைவியை உனக்கு ஞாபகப்படுத்துகிறதே , அப்படித் தான்
எம் நாட்டு வாலிபர்களுக்கு தம் மனைவிகளின் காதல் நிறைந்த காத்திருப்புகளை இந்த மனோகரமான சுகந்தம் மீண்டும் ...மீண்டும் மீள முடியாமல் நினைவுபடுத்தி "மடையர்களே போதும் உங்கள் பொருள் தேடல் ; வாருங்கள் உங்கள் இல்லாளைத் தேடி " இந்நேரம் உங்கள் மனைவிமார்கள் உங்கள் மனைகளிலெல்லாம் அரிசியும் நெல்லும் பரத்தி அகல் விளக்குகளை ஏற்றி வைத்து இல்லுறை தெய்வங்களை வணங்கி விட்டு உங்கள் வருகையை எதிர்கொண்டு உள்ளுக்கும் வாசலுக்கும் நிலையின்றி கண் பதித்துக் காத்திருப்பார்
" அன்னம் ...நாரை ...புறக்களால் தான் பறந்து வந்து தூது சொல்ல முடியுமா என்ன?நான் கூட பறந்து வருவேன் தூது செல்ல " என்று இந்த பொல்லாத நறுமணம் அவர்களை பரிகசித்து தழுவி தாண்டி செல்லும் ,
மொத்தத்தில் இங்கு மாலைப் பொழுதுகளில் இனிமை கூட்ட "நறுமண விடு தூது " என்று கூட நீ எண்ணிக் கொள்ளலாம் நிகோலா ... இப்படிச் சொல்லி விட்டு ஹரிஹரன் தனக்குள் நகைத்துக் கொண்டான் .
நிகோலா தான் இப்போது லண்டனுக்குப் போய்விட்டானே ;
ஓ மை டியர் மார்கரெட் ...! இன்னும் ... இன்னும் ...எத்தனை ... எத்தனை நாட்களோ ; இல்லையில்லை மாதங்களோ என் அன்பே ! மனைவியைப் பற்றிய தாபத்தால் நீண்ட நெடிய ஏக்கப் பெருமூச்சு விட்ட நண்பனை ஆதரவாய் தோளோடு அணைத்து;
ஆயிற்று நிகோலா ; இதோ நீ ஆவலோடு எதிர்பார்த்த எங்கள் ஹம்பியின் விருபாசா ஆலயத் தேர்த்திருவிழா இன்னும் இரு தினங்களில் துவங்குகிறது ,பிறகென்ன அது முடிந்ததும் நீ உன் பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பா சென்று விடப் போகிறாய் , அதுவரை இதோ "இந்த நறுமணம் உன்னோடு வாழட்டுமே நண்பா " என்றான் .
நண்பனின் ஆறுதல் வார்த்தைகள் நிகோலாவை மீண்டும் ஹம்பிக்கு அழைத்து வரவே சிலிர்ப்புடன் தலையை உலுக்கி கொண்டு கண்கள் விரிய சொன்னான் .
ஹரிஹரா நான் எனது தேசம் செல்லும் போது மறவாமல் இந்த நறுமணத்தையும் என்னுடன் அழைத்துச் செல்வேன் .அதை எனக்காக நீ பரிசாகத் தருவாயா என் அருமை நண்பனே ! என்றான் .
அவனது அளவற்ற ஆர்வம் கண்டு கேலி இழையோட உரக்கச் சிரித்த ஹரிஹரன்.நிச்சயமாக நிகோலா ...ஆனால் முழுதாக நறுமணத்தைப் பரிசளிக்க யாராலும் முடியாது அப்பனே ! வேண்டுமானால் அந்த வாசனையை எழுப்பும் வேர்கள் , பட்டைகள் , (அகில் ,சந்தனக் கட்டைகள் ,கற்பூர மரவில்லைகள் , தைல மரப்பட்டைகள் ) இவற்றை எல்லாம் நான் உனக்கு எனது அன்புப் பரிசாகத் தருகிறேன் , உன் ஊரை அடைந்ததும் அதை நெருப்பிலிட்டு எரித்தால் நீ மாய்ந்து மாய்ந்து ரசிக்கும் நறுமணம் உன்னோடு உன் வீட்டையும் நிறைத்திடலாம் ;
ஓ நன்றி ஹரிஹரா ...அப்படியே செய் என நிகோலா முடிக்கவும் ஹரிஹரனின் மாளிகை வரவும் சரியாக இருந்தது .
இவர்கள் மாளிகையை அடைந்த நேரம் சேனாதிபதி அப்பண்ணா மனையிலிருந்தார்,
வா நிகோலா ;எப்படியிருக்கிறது எங்கள் ஹம்பி ? அயல் தேசத்திலிருந்து இங்கே வந்திருக்கும் நீ ஹம்பியின் விருந்தினன் ;உன்னை உபசரிப்பதும் உன் தேசத்தைக் கௌரவிப்பதும் வேறு வேறல்ல ...
உனக்கான சௌகர்யங்களில் குறைவேதுமில்லையே இளைஞனே ... எதுவானாலும் சொல் நிகோலா என்றபடி தம் கனமான பார்வையை பார்வையை அவ்விரு இளைஞர்களிடம் படர விட்டார் .
மிக்க நன்றி மதிப்பிற்குரிய சேனாதிபதி அவர்களே;ஹரிஹரன் இருக்கும் போது எனக்கென்ன குறை இருந்து விடும் ? அதோடு நீங்கள் மேன்மை வாய்ந்த பதவியில் இருப்பவர் உங்களது இந்த அன்பான விசரிப்பே போதும் , எனக்கு இங்கே ஒரு சௌகர்யக் குறைவும் இல்லை ,என் மனம் மகிழும் வண்ணமே எல்லாம் நடக்கிறது .
நிகோலாவின் பதிலால் திருப்தி அடைந்த அப்பண்ணா ;
நல்லது நிகோலா , சரி உணவருந்திவிட்டு விரைவாகவே உறங்கச் செல்லுங்கள் ,அடுத்து வரும் பத்து தினங்களும் நமது மன்னர் இரண்டாம் தேவராயர் கோலாகலமாய் நடத்தும் விருபாசா ஆலயத் திருவிழவால் குதூகலமும் கொண்டாட்டமுமாய் ஹம்பியே திணறிப் போய் அமளிப் படும் , இளைஞர்களான நீங்களும் அதில் ஆழ்ந்து விடுவீர்கள் ; அதனால் இப்போதே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ,சரி தானே என்றார் .
நல்ல சுவையான இரவு உணவு முடிந்ததும் திறந்திருந்த சாளரங்களின் வழியே உட்புகுந்த மென்காற்றால் கண்களை சுழற்றிக் கொண்டு தூக்கம் வர சயனஅறைகள் பேச்சு மூச்சின்றி நிசப்தத்தில் ஆழ்ந்தன.
மறுநாள் எப்போதும் போல் கழிந்தது ,
அதற்கடுத்த நாள் தேர்த் திருவிழா கனஜோராய் ஆரம்பமானது .
சாதாரண நாட்களில் நிகோலாவின் கருத்தில் அவ்வளவாகப் பதியாத தேர்வீதியின் பிரமாண்டம் அன்று அவனை வெகுவாக வியப்பில் ஆழ்த்தியது .ஒற்றையாய் அகலமான நீண்ட பெரிய நேர்கோடாக அமைந்த தேர்வீதி கிட்டத் தட்ட ஒரு கிலோமீட்ட்ர் நீளமும் ஐம்பதடி அகலமும் கொண்டதாகப் பறந்து விரிந்திருந்தது . விருபாசா ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் ஆரம்பிக்கும் வீதி மதங்கா மலையின் வடமேற்கு அடிவாரம் வரை நீண்டு கொண்டே செல்வதைக் கண்டு நிகோலா பெரிதும் ஆச்சர்யப்பட்டுப் போனான் .உலகில் தான் கண்ட எல்லா சாம்ராஜ்யங்களிலும் கூட இப்படி ஒரு வெகு பிரமாண்டமான தேர்வீதியைக் கண்டதில்லையோ ! என்று அதிசயித்துகொண்டு மீண்டும் அங்கேயே பார்வையை சுழல விட்டான் .தேர்வீதியின் இருபுறங்களிலும் அழகழகான மாடங்களுடன் கூடிய இரட்டைத் தள வீடுகளும் ; திருவிழாவுக்கென முளைத்த சிறப்பு அங்காடிகளும் , விழாவைக் காண வருவோருக்கென நிறைய சத்திரங்களுமாய் நிரம்பி அந்தத் தேர்வீதியே ஜெகஜோதியாய் ஜொலித்து ஹம்பிக்கு கூடுதல் அழகூட்டிக் கொண்டிருந்தது .இன்று நிகோலா தனியாகத்தான் ஊர் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான் . கூடவே புறப்பட்ட ஹரிஹரனுக்கு " வெகு அவசரம்... உடனே வா " என அப்பன்னா இடமிருந்து அவரது பணியாளன் ஒருவன் அழைப்பு கொண்டுவர அவன் அங்கே போக வேண்டியதாகி விட்டது. என்ன தான் படைத்தளபதியின் தம்பியானாலும் ஹரிஹரன் படிப்படியான முன்னேற்றத்தையே விரும்பி ஒரு சாதாரண ஒற்றர் படை வீரனாகவே "சங்காமா " அரசில் பணியில் இருந்தான் . வெகு விரைவாகவே அரசர் இரண்டாம் தேவராயரின் அன்பையும், நன்மதிப்பையும் கூட சம்பாதித்து விட்டான் .'நண்பன் நல்ல திறமைசாலி தான் ' என்று எண்ணமிட்டவாறு நடந்து கொண்டிருந்த நிகொலாவை ; அந்தக் குரல் பிடித்து இழுத்து நிறுத்தியது .
ஐயோ ...காப்பாற்றுங்களேன் ...யாராவது வந்து உதவுங்களேன் ...யாரவது வாருங்களேன் ... யாருமே இல்லையா என்னைக் காப்பாற்ற !!! ஒரு இளம்பெண்ணின் அவலக்குரல் அங்கிருந்த ஆடைகளுக்கான அங்காடிப் பகுதியில் இருந்து வலிந்து வெளியேறி வீதியில் போவோர் வருவோரை கட்டி இழுத்து நிறுத்தியது .

கூழாங்கற்கள்




கூழாங்கற்கள்


ஆளில்லாக்


காடு


அசைவிலா


நெடுமரங்கள் ;


கும்மிருட்டின்


நெருக்கமாய்


புதர்ச்செடிகள் ;


சலனமின்றிப்


பாய்ந்தோடும்


சிற்றாறு ;


அதனடியில்


நெடுநாளாய்


இடம் மாறா


கூழாங்கற்கள் !?



கயல்

அட்சயபாத்திரமும் அபார்ட்மென்டும்...!!!




அட்சய பாத்திரமும் அபார்ட்மென்டும்



வெண்டையும்
கத்தரியும்


பீர்க்கையும்

புடலையும்


கொத்துக் கொத்தாய்


காய்த்துக் குலுங்கும்


தாத்தாவின்


தோட்டமெனும் அட்சயபாத்திரம்


மத்தியான இடைவெளியில்


சோற்றுக் கும்பாக்களால்


களை கட்டும்


கிணற்றடி மோட்டார் ரூம்


தோட்டம் சுற்றி


வரப்போரம் அணை கட்டும்
ஆமணக்கும்
மஞ்சநத்தியும்
தப்பி முளைத்த
தண்டுக்கீரைச் செடிகள்
ஊசி நுழையும் இடைவெளியில்
ஊடுருவும் பிரண்டைக் கொடிகள்
மடி நிறைய அவரைக்காயும்
தூக்கு நிறைய தக்காளியும்
கண் காணக் கிடைப்பதில்லை
இன்றைய சாயங்காலப் பொழுதுகள் ,
இதுவும் ஒரு காலம் !
இப்படியும் பொழுதுகள் கழியலாம்
தாத்தாவும்
இன்றில்லை
அட்சய பாத்திரமும்


இங்கில்லை
இருப்பதெல்லாம்
கம்பீரமான
அபார்ட்மென்ட் மட்டுமே
லேசாய் மிக லேசாய்
மனம் வலித்தாலும்
நானும் அங்கே
குடியிருப்பதால்
பாழும் நினைவுகள்
மட்டும்
நீங்காமல் நெஞ்சோடு ...!!!
கயல்

Sunday, October 5, 2008

நீடித்து நிற்பது எது?

நீடித்து நிற்பது எது?

தேடும் தொலைவுகளில்

எதுவும் கிடைப்பதில்லை

கிடைக்கும் தூரத்தில்

எதுவும் உவப்பதில்லை

உவக்கும் விஷயங்களும்

நெடுநாள் நீடிப்பதில்லை ...

நீடித்து நிற்பது எது?

நீயும் நானும் மட்டுமே

வானம்

பூமியிடம்

ஒருவேளை இப்படிச் சொல்லிடுமோ ?

இப்படியே ,

இப்படியே ...

கண்டதை யோசித்துக் குழம்பி

ஒருவழியாய்

கண் சொருகி தூங்கிப் போனேன் ...!!!

நாளை காலை

முழு ஆண்டுத் தேர்வு ?!


கயல்

Saturday, October 4, 2008

"கடந்து போனவள் "

எதிர் வெயிலுக்கு முகம் சுருக்கி தன் முன்னே நடந்து போய்க் கொண்டு இருந்த அந்தப் பெண்ணை முருகேசனுக்கு கொஞ்ச நாளாய் நன்றாகவே தெரியும் . தினமும் இந்த வழியாகத்தானே போகிறாள் ....வருகிறாள் ...; ஒரு முறையேனும் அவள் இவனைத் திரும்பி பார்த்ததில்லை ... இவனும் அப்பெண்ணை பார்க்க வேண்டும் என்று பார்த்ததில்லை ... பழக்கதோஷம் என்பார்களே அப்படித்தான் இதுவும் ,
முருகேசன் அயன் கடை வைத்திருந்த தெரு அப்பெண் குடியிருக்கும் தெருவாகி விட்டதால் அடிக்கடி பார்வையில் பட நேர்ந்தது ...அதுவே பின்னாளில் அவளைப் பற்றி அவன் யோசிக்கவும் வழிவகுத்தது . ஒருநாள் அப்பெண்ணைப் தெருவில் பார்க்கா விட்டாலும் " இன்னும் காணோமே ... என்று மனம் கேள்வி கேட்கும் நிலை வந்து விட்டது இப்போதெல்லாம் ...
பசி வந்ததும் கூடவே தங்கத்தின் ஞாபகம் வந்தது , மதியம் என்ன செய்து வைத்திருப்பாளோ ? எட்டு மணிக்கெல்லாம் " மீன் ...மீன் ...மீனோய்... வஞ்சிரம் மீனோய் ! என்று கூவி கொண்டு போன மீன்காரனின் குரல் செவியில் இன்னும் கூட தேனாய் தித்தித்தது , இன்றைக்கு மீன் செய்ய சொல்லி இருக்கலாம் ...!!! தங்கம் எது செய்தாலும் வாய்க்கு ருஷியாகத்தான் செய்வாள் .கோழிகறி ஆகட்டும் ...ஆட்டுக்கறி ஆகட்டும் ...உண்டு முடித்தபின் ஆளை ஒரு அசத்து அசத்தி விடும் . தங்கத்துக்கும் , முருகேசனுக்கும் கல்யாணமாகி ஐந்து வருடம் ஓடி விட்டாலும் சின்னஞ்சிறுசுகள் போலத் தான் இப்போதும் கேலியும் கிண்டலும் தூள் பறக்கும் அவர்களது சம்பாசனையில் .
பிள்ளையில்லாத வெறுமை கூட இதற்கு காரணமாயிருக்குமோ என்னவோ?
பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணின் பெயர் முருகேசனுக்குத் தெரியாது . கூட ஒரு குழந்தை நடந்து போகும் அது அவளுடைய குழந்தை தான் . வாய் ஓயாமல் பேசிக் கொண்டே போகும் . "மம்மி நீ வர வேண்டாம் னு சொல்றேன்ல" நான் தான் இப்ப பிக் கேர்ள்ஆயிட்டேன் ல"அவள் அதிகம் பேச மாட்டாள் , "ரோட்டைப் பார்த்து நட குட்டிம்மா " இது தான் அவள் பேசி அவன் கேட்ட வார்த்தைகள் ,
மாமியார் தூரத்தில் துணி மூட்டையுடன் வருவது இங்கிருந்து நிழல் அசைவாய் கண்ணில் பட்டது , பாவம் இந்த வயதிலும் கடின உழைப்பாளி , வீடு வீடாய் போய் அயனுக்குத் துணி வாங்கி வருவாள் அதை பெட்டி போட்டுத் தந்ததும் மறுபடி வீடு வீடாய் போய் கொடுத்து பணம் வாங்கி கொண்டு வருவாள் . முருகேசனுக்கு நல்ல சப்போர்ட் , என்று பக்கத்தில் கறிக்கடை வைத்திருக்கும் முனியசாமி சிலாகித்துச் சொல்லிக் கொள்வார்.
மாமியார் வெயிலை உடல் முழுதும் உறிஞ்சி விட்ட ஆயசத்தில் கருத்துப் போன முகத்தைத் அழுந்தத் துடைத்து விட்டு , பானையில் இருந்து சொமபு சொம்பாய் நீர் மொண்டு குடித்து விட்டு கொஞ்சம் முகத்திலும் சுளீர் ...சுளீரென்று தண்ணீரால் அடித்துக் கொண்டு துடைக்காமல் விட்டு விட்டாள். காற்று படப் பட இதமாய் இருக்கும் போல ...
"சரி முருகேசு நீ வீட்டுக்குப் போ ... மணி ஆவுது பாரு"
நல்லவள் தான் ஆனால் வாய் கொஞ்சம் ஜாஸ்தி ... பேச்சு அதிகாரமாய் தான் இருக்கும் , இதனால் அயனுக்கு தருகிறவர்கள் ஒன்றிரண்டு பேருடன் அவ்வப்போது சின்ன சின்னத் தகராறும் செய்து கொள்வாள் ,பிறகு மறுபடி அவளே அதை சரி செய்து விடுவாள் , பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணுடன் கூட ஒருமுறை சின்ன சண்டை போட்டிருக்கிறாள் ,
அன்றைக்கு முருகேசன் கடைக்கு வராத நாள் .மச்சினன் சித்த நாதனை கடையில் நிற்க வைத்து விட்டு புதுப்பேட்டையில் இருக்கும் ஒன்று விட்ட தம்பி மனைவியின் நாத்தனார் இறந்த துஷ்டி கேட்க போயிருந்தான் .
அந்தப் பெண் கடைக்கு துணி கொண்டு வந்து அவன் பார்த்ததில்லை ?மாமியார் தான் போய் வாங்கி வருவாள் , அவசரமென்றால் அவளது கணவன் வந்து பெட்டி போட்ட துணிகளை வாங்கி போவான் . அவள் வீட்டு துணிகள் இவனுக்கு நன்றாகவே அத்துப்படி கணவனது உடைகள் நிச்சயம் விலை கூடுதலாய்த் தான் இருக்கும் ,அருமையான மேல்சட்டைகள் , பெரும்பாலும் அவளது துணிகள் வராது . எப்போதாவது ஒரு சுடிதார் வரும் ,இல்லாவிட்டால் பட்டுப்புடவை வரும் . குழந்தையின் பட்டுப்பாவாடை ,சட்டை ,இப்படி கொஞ்சம் வரும் . அவள் சுடிதார் அயனுக்குப் போடததாலோ என்னவோ ! தினம் அவள் கடை தாண்டிப் போகையில் இவன் அவளது உடை பார்க்க ஆரம்பித்தான் .
ஓ... இன்னைக்கு பச்சை கலர் சுடிதார் ! இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதான் சிவப்புக் கலர் சுடிதாரோ ..! அட இந்த ஊதா கலர் சுடிதார் அந்தப் புள்ள நிறத்துக்கு அவ்ளோ எடுப்பா இல்லையோ ...?! இதென்ன இவ்ளோ சுருக்கஞ் சுருக்கமா இருக்கு ? நல்லா தண்ணிய உதறி சுர்ருன்னு இழுத்து தேய்ச்சா அப்படியே கம்பியாட்டம் நிக்கும் இந்த வெள்ளைக் காட்டன் சுடிதார் ... சேலை கட்டவே மாட்டா போல ?ஒருமுறை எதேச்சையாய் தங்கத்திடம் கூற அவள் பார்த்த கேலிப் பார்வையில் பிறகு இவன் கருத்து கந்தசாமி போல அவளிடம் எல்லாம் சொல்வதை நிறுத்தி விட்டான் .
இன்றைக்கு காலையில் எழுந்ததிலிருந்தே மனம் ஏதோ ஒரு அவஸ்தையில் பர பரவென்று தான் இருந்தது , எப்போதாவது இப்படி நிகழ்வதுண்டு தான் ,
பதினெட்டு வயதில் முதல் முறை சொந்த அத்தை மகள் கனகம் வயசுக்கு வந்ததும் கூட்டாளிகளின் கேலி கிண்டலுக்கு மத்தியில் அவளுக்கு குச்சு கட்டப் போகையில் இப்படித்தான் ஆனதாய் ஞாபகம்....!!!
பிறகொரு முறை ; மதுரை அழகர் கோயிலின் தீர்த்த தொட்டியில் குளித்து விட்டு கீழே வருகையில் குரங்குக்கு பயந்து மிரண்டு ஒதுங்குவதாய் நினைத்து தடுமாறி விழப்போன பத்து வயது பெண் குழந்தை ஒன்று இவன் மீது மோதி நிற்க பதறிப் போய் தாங்கினான் . நடுங்கி ஓய்ந்த குழந்தை சரியானபின் சிறு புன்னகையுடன் ; "தேங்க்ஸ் அங்கிள் " என்று புறங்கையில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட . அப்போதும் இப்படித்தான் பர பரத்து சிலிர்த்தது மனசு .
பிறகு தங்கத்துக்கும் அவனுக்கும் கல்யாணமான அன்று இரவில் அவளுக்காக தனி அறையில் காத்திருக்கும் போது கூட மனம் இப்படி தான் .... வெட்ட வெளியில் சீறும் காற்றில் ஒற்றையாய் கொடியில் சட சடக்கும் சல்லாத் துணி போல் பட பட வென அடித்துக் கொண்டு பர பரத்து அலைந்தது .
இது போல சொல்லிக்கொள்ள உதாரணங்கள் இன்னும் கூட சில உண்டு அவனுக்கு .... இன்று என்ன வரப் போகிறதோ ?!போனவளை இன்னும் காணோமே ?! யோசனையுடன் அவள் போன திக்கை யதேச்சையாய் பார்த்தால் அவள் கணவன் தான் என்றுமில்லா அவசரகதியில் வண்டியை அலற விட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான் . கொஞ்சம் மெதுவாய் போனால் தான் என்ன ? மனதோடு சொல்லிக் கொண்டான் .
அவளைக் காணோம் , இந்த வழியாகத்தானே வருவாள் என்று மறு படி சொல்லிக்கொண்டு , மதியச் சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் புறப்பட்டுப் போனான் . சாப்பிட்டு விட்டு ஒரு அரை மணி தூங்குவான் ,இன்றும் அப்படிப் படுத்தான் . காலையிலிருந்து உள்ளே எழுந்து ஆடிக் கொண்டு இருந்த மனப் பாம்பின் சீற்றம் தங்கம் இவன் கேட்காமலே மனதறிந்து செய்து வைத்த வஞ்சிரம் மீனில் சற்றே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓய ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே தூங்கி விட்டான் போல ....!
தங்கம் டீ போட்டுக் கொண்டு எழுப்பித் தரும் போது மணி நான்கை தொட்டிருந்தது , மாமியார் புலம்பிக் கொண்டிருப்பாளே என்று வேக வேகமாய் கிளம்பி போனான் . மெல்லத் தான் போயேன் ....ஏன் ஓடற ...? தங்கம் பேசியவாறு பின்னோடு அவனுடனே கடைக்கு வந்தாள் ...கொஞ்ச நேரம் இருந்துவ்விட்டு விளக்கு வைக்க வீட்டுக்குப் போவாள் அவள் .
கடைக்குள் நுழைந்தவனுக்கு ஆச்சர்யமான இன்ப அதிர்ச்சி மேலெழும்பி குதியாளம் போடாத குறை தான் , அந்தப் பெண் இரண்டு பெரிய கட்டை பைகள் நிறைய அயனுக்குத் துணிகள் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தாள்.அன்றைக்கு முருகேசன் வழக்கத்தை விட ரொம்ப சந்தோசமாய் மனைவியிடமும், மாமியாரிடமும் பேசிச் சிரித்தவாறு துணிகளைப் பெட்டி போட்டு முடித்தான் .
இனிமேல் அவள் வீட்டுத் துணிகள் மறுபடியும் இங்கே தான் வரும் . அவள் வந்ததில் இவனுக்கு என்ன சந்தோசமோ ???!!! அவனுக்கே புரியவில்லை தான் ...ஆனாலும் குதூகலமாய் ராத்திரிக்கு தங்கத்துக்கு அல்வா வாங்கிக் கொண்டு போனான் வீட்டுக்கு .. என்னய்யா இது ? சனிக்கிழம தான வாங்கிட்டு வருவா ... இன்னிக்கி என்னவாம் ..என்று வெட்கச் சிரிப்போடு வாங்கி வைத்த மனைவியின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளி விட்டு குளிக்கப் போனான் . இரவு நன்றாகத் தூக்கம் வந்தது .
மறுநாள் வழக்கத்தை விட வேகமாய் கடை திறந்து வேலையை ஆரம்பித்தான் .அவன் கடைக்கு அடுத்து ஒரு மளிகைக் கடை, ஒரு ஜெராக்ஸ் கடை .ஒரு கல்யாணமண்டபம் ,அதற்கும் அப்பால் வக்கீல் சீதாராமன் வீட்டை அடுத்து அவள் குடியிருக்கும் வீடு தான் , அது ஒரு அபார்ட்மென்ட் , மொத்தம் இருபது வீடுகள் ,அவள் இருப்பது முதல் பிளாட்டில் தான் ,
முருகேசன் கடை திறக்கும் போது நேரம் ஏழரை மணி இருக்கும் . வழக்கமாக எட்டு மணிக்கு தான் போவான், இன்று என்னவோ ஒரு இனம் புரியா உல்லாஷம்.
யதேச்சையாகத்தான் பார்த்தான் .... அவள் பிளாட்டின் முன்புறம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது . நெடு நேரமாய் நின்று கொண்டிருக்கும் போல இவன் இப்போது தான் பார்கிறான் .யாரோ வீடு மாற்றிக் கொண்டு போகப் போகிறார்கள் போல ... அந்த பிளாட்டில் இப்படித்தான் அடிக்கடி ஒரு வீட்டில் மட்டும் இப்படி நிகழும் . ராசி இல்லாத வீடாம் அது ... என்ன ராசியோ ?! என்ன நம்பிக்கையோ ? போங்கடா நீங்களும் உங்க நம்பிக்கையும் ...! கிண்டலாய் உள்ளே நகைத்துக் கொண்ட முருகேசன் தன் வேலையைப் பார்க்கலானான் .
நேரம் போய்க் கொண்டே இருந்தது . அந்தப் பெண்ணைக் காணோம் ...! குழந்தையையும் பள்ளிக்கு கூட்டிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை பெட்டி போடப் பட்ட துணிகளையும் வாங்கிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை . சரி வரும் போது வரட்டும் .... இவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ; அந்த லாரி தாண்டி முகமெல்லாம் சந்தோசம் பூத்துக் குலுங்க அவள் ....அவள் தான்.... அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள் .... இவனது கடையை நோக்கி ...துணி வாங்க வருகிறாள் போல ...
வரட்டும் ... வரட்டும் ... அவளது சந்தோசம் ' முருகேசனையும் தொற்றிக் கொள்ள ... அப்போது சூரியன் எப் எம் மில் "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" பாடல் முடிந்து "வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே" பாடல் மாயவரம் ராதா ,மதுரை சுப்பு , தேனாம் பேட்டை மல்லிகா ,ஒன்டிபுதூர் அம்பிகா ஆகியோருக்காக ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள்;
மெல்லப் தனக்குள் பாடிக்கொண்டே அவள் கிட்டே வரக் காத்திருந்தான் ... வந்தாள் ... வந்தவள் ... அவன் மாமியாரிடம் . எவ்ளோ ஆச்சு ஆயா ? என்று கேட்டு பணம் தந்து துணி வாங்கி நகரப் போனாள். வக்கீல் சீதாராமன் மனைவி காம்பௌண்டில் இருந்து எட்டிப் பார்த்து சத்தமாய் கேட்டாள்..."ஏண்டிம்மா கல்பனா .. எத்தனை மணிக்கு கிளம்பறேல் ...சாமான் சட்டேல்ல்லாம் பாத்து பாக் பண்ணிட்டேலா இல்லியோ ?
" அவள் மாமிக்கு என்ன பதில் சொன்னாலோ !!! அவளது வீட்டைப் போலவே இப்போது இவனது மனமும் காலியாக .... ஒரு கணம் முகத்தில் சந்தோசம் வடிந்து சங்கடம் காட்டி நின்றவன் .....சின்னதாய் உள்ளே ஒரு குரல் ஓ... கல்பனாவா ...இதான் உன் பேரா ..? என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டது.இந்தக் கல்பனா இனி அவன் கடை தாண்டி .. அந்தப் பக்கம் போக மாட்டாள் .இந்தப் பக்கமும் போக மாட்டாள் ... ஏன் இடப்பக்கம் ... வலப்பக்கம் என்று எந்தப் பக்கமும் போகவே மாட்டாள் தான் ...
அவள் இனி அந்தத் தெருவில் இருந்தால் தானே எப்பக்கமும் போவதற்கு ? முருகேசனின் மன பரபரப்பு இந்த முறை இப்படி தான் ஓய வேண்டும் போல ?!இப்படி எல்லோருடைய வாழ்விலும் நிகழ்வது உண்டு தானே !!!****************************************************************கயல்***********************************************************

"சிட்டுக்குருவி"

இது நான் முதல் முறையாக முழுதாக முடித்த முதல் சிறுகதைஉங்களுக்கு இதைப் படிக்க நேரம் இருக்குமா என்ன ? என்பதெல்லாம் எனக்குதெரியவில்லை , ஆனாலும் அனிச்சை செயல் போல அனுப்புகிறேன் .தங்களது கருத்துகளையும் , யோசனைகளையும் எதிர்பார்த்து தான் ....முடிந்தால் பதில் எழுதுங்கள்.
"சிட்டுக்குருவி"
திடீரென்று தான் இப்படி ஆகிவிட்டது ; கதை பேச மாமா இல்லை , கேலி செய்யஅத்தை இல்லை , கொஞ்சிக் கொண்டே உருட்டி உருட்டி உள்ளங்கையில் சாதம்வைக்க அம்மா இல்லை .சித்தி கூட எங்கேயோ தூரத்தில் இருந்து கொண்டுஎப்போதோ தொலை பேசுகிறாள் , சித்தப்பா வீடு தங்குவது அரிதாகிப் போய்நெடுநாளகிறது, பாட்டிக்கு இந்த பட்டணம் பிடிக்காமல் ஊரோடு போய் விட்டாள்,தாத்தாவோ ரேஷன் கடை ,மளிகைக் கடை ,மார்கெட் என்று ஓய்ந்து பின்மாலையில்அவர் வயது மனிதர்களைத் தேடி கோயில் , பார்க் என்று போய் விடுகிறார் , என்னையாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை !!! .வேப்பமரமும் , புளியமரமும் இல்லாத இந்த ஒன்டிக்குடித்தன நகரத்து நரக வீடுகொஞ்சம் கொஞ்சமாய் என்னை கொல்லபோவதை போல தினமும் கெட்ட கெட்டகனவுகளில் தூங்கவே முடியாத சோகத்தில் தான் இன்று இந்த பின் மத்தியானநேரத்தில் கால் காசு பெறாத இந்த "சிட்டுகுருவியுடன்" விருதாவாய் பேசிக்கொண்டுஇருக்கிறேன் .சிட்டு குருவி "விசுக் விசுக்கென்று " பறந்து கொண்டிருந்தது முன் புற பொதுதாழ்வாரத்தில் , யாரோ காய வைத்த வடகத்தை கொத்தி கொத்தி குட்டி மண்டையை'விலுக் விலுக்கென்று' ஆட்டியவாறு சிறிது வாயிலும் சிறிது வாசல் படியிலுமாக சிந்திசிதறி விழுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏதோ ஒரு நொடியில் அதன் பார்வையில்நான் பட்டிருக்க வேண்டும் ,அதுவாகத் தான் என்னிடம் பேச ஆரம்பித்தது ; முதலில் பேச்சு எப்படி தொடங்கியதுஎன்று யோசித்தேன் நான் !. அதற்கு என் பெயரெல்லாம் தெரிய சாத்தியமே இல்லை ,ஒருமையில் தான் பேசிகொண்டிருந்தது . இனுக்கி இனுக்கியாய் பிய்த்த வடகத்தைஅலகில் சிக்க வைக்க முயன்று தோற்று போன வெறுப்போ என்னவோ ? சும்மா ஏன்என்னையே பார்கிராய் ? என்று காட்டமாய் கேட்டு விட்டு வெளிப்புற கேட் வரைபறந்து காட்டி விட்டு திரும்ப வந்து ஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு " பதிலைசொல்லி தொலை என்பதை போல "என்னையே இலக்கு மாற்றி மாற்றிபார்த்துக்கொண்டே இருந்தது .ஒரு சிட்டுக்குருவி பேசுமா ? என்பதையே நம்ப முடியாமலிருந்த நான் அதன்கேள்வியில் திடுக்கிட்டு போனேன் . பேசும் குருவியா இது ? என்ற உற்சாகத்தில்சந்தோசம் பீறிட்டுக் கொண்டு வர என்ன கேட்டாய் குருவி ? என்றேன் நான் ;குருவி இளக்காரமாய் சிரித்துக்கொண்டது , மறுபடி பேச முயலவேயில்லை ;பார்த்துக் கொண்டிருக்கும் போதே குருவி ஜன்னலில் இருந்து எம்பி பறக்கபோவதை போல போக்கு காட்டியது,பிறகு மறுபடி என்னை நீயும் வருகிறாயாஎன்னோடு ? என்பதை போல சும்மா பார்த்துக்கொண்டு உட்கார்ந்து விட்டது, அடுத்துஎன்ன செய்யப் போகிறாய் நீ ? என்று நானும் விடாமல் அதையே கவனிக்கதொடங்கினேன். குருவி கொஞ்ச நேரம் பார்த்த பின் "எனக்கு ஒரு தோசை தாயேன்"என்றது . இல்லை...கெஞ்சுதலாய் எல்லாம் இல்லை . சட்டமாய் கேட்டது ; நீ எனக்கு கொடுத்து தான்ஆகவேண்டும் என்று தொனியில் கேட்டதோடு "விருட்டென்று " சமையல்கட்டுக்குள்ளும் பறந்துபோய் விட்டது . என்ன திமிர் இந்த குஞ்சு குருவிக்கு என்றுசெல்ல கோபத்தோடு நானும் பின்தொடாந்தேன். வேறு என்ன செய்ய வீட்டில்அப்போது யாரும் இல்லை ! அம்மா குவைத்திற்கு வீட்டு நர்சாக காண்டிராக்டில் போய்மாதம் ஆறு ஆகிறது . ஊரிலிருந்தால் கடன்கொடுத்தவர்களின் தொல்லை கழுத்தைநெரிக்கும் என்று தான் சென்னைக்கு வந்து ஒரு மில் முதலாளிக்கு கார் டிரைவர்ஆகிவிட்டார் அப்பா ,பாட்டி தான் ஊருக்குள் எதையோ சொல்லி சமாளித்து கொண்டுவீட்டோடு இருக்கிறாள் , ஊரை விட மனமில்லை என்பதெல்லாம் வெறும் நகாசுப்பேச்சு , அவளும் வந்து விட்டால் வீட்டை பண்ணை வீட்டு ராமசாமி அடிமாட்டுவிலைக்கு எடுத்துக் கொண்டு வாங்கிய கடனுக்கு நெடுநாளாய் கட்டாமலிருந்தவட்டிக்கு கழித்து விடுவாரோ என்ற அதீத பயம் தான் காரணம் ! குருவிசாவதானமாய் சமையல் உள்ளில் புகுந்து தோசை மூடி வைத்த தட்டத்தை அலகால்இடறித் தள்ளி விட்டு "சீனி போடு கொஞ்சம் என்றது" , என்னால் சிரிப்பை அடக்கவேமுடியவில்லை . சிரிக்கும் என்னை ஒரு தூசி போல பார்த்து விட்டு , அதுவே பறந்துபோய் நல்லெண்ணெய் இருந்த வால்கின்னத்தை தூக்க முடியாமல் தூக்க முயன்றுஎண்ணையை கொட்டி கவிழ்த்து கொண்டது தோசை இருந்த தட்டில்ஐயோ ! ஏய் குருவி என்னிடம் கேட்டால் நான் எடுத்து தந்திருக்க மாட்டேனா ? இப்படிஎண்ணெய் முழுசும் கொட்டி தீர்த்து விட்டாயே ! மறுபடி எண்ணெய் வாங்க காசுக்குநின்றால் அப்பா ஆயிரம் கேள்வி கேட்பாரே! உன்னால் எனக்கு நேரம் சரியில்லைஇன்று என்றேன் நான் எண்ணெய் இழந்துவிட்ட ஆற்றாமையில் ... குருவிஅதையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை , அது பாட்டுக்கு ஒருதோசையை அறையும் குறையுமாய் சிந்தி சிதறி குதறிப் போட்டுவிட்டு ... அப்புறம்என்ன ? என்று தண்ணி தொட்டியின் விளிம்பில் போய் உட்கார்ந்தது . தொட்டி தளும்பநீர் பிடித்து ஊற்றி வைத்திருந்தேன் நான் ; விழுந்து விடாதே .... பார்த்து உட்காரேன் ;நான் தான் பதறினேனே தவிர அது என்னவோ தேர்ந்த நீச்சல் வீராங்கனை போலவிளிம்பில் இதன் அசைவில் தளும்பி மேலெழுந்த சின்ன தண்ணீர் துள்ளலில்தலையை விட்டு ஆட்டிப் புரட்டி ஒரு மினி தலைகுளியல் செய்து கொண்டது , பார்க்கபார்க்க அதிசயமாய் இருந்தது ;அதோடு முடியவில்லை கதை ,குளிர்ந்த தண்ணீர் பட்டதும் ஒட்டிக்கொண்டசிறகுகளை சடசடவென அடித்து தூசிபடலம் போல நீர்படலத்தை தெறிக்க விட்டுபுகை போக்கி ஓட்டை வழியே அடுப்படி மேல் விழுந்த வட்ட சூரிய ஒளியில் போய்நின்று கொண்டு இப்படியும் அப்படியும் திரும்பி வெப்பம் வாங்கி கதகதப்பாகிக்கொண்டது , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு " அது குருவியாய்தெரியவில்லை ஏதோ விருந்துக்கு வந்த அத்தை மகளை கூட நின்று பார்ப்பதைபோல ஒரு தோழமை உணர்வு சட்டென மேலெழுந்து அந்த அறை முழுதும் நிரம்பிவழிந்து கசிந்தது .நான் இங்கே இப்படிக் குருவியோடு குருவியாய் லயித்து நிற்பது பால்காரஅண்ணாமலைக்கு தெரியுமா என்ன? எப்போதும் நேரம் தப்பி பால் கொண்டு வந்துவசவுகளை அழுக்கு வெள்ளை வேஸ்டி நிறைய வாங்கி கட்டிக்கொண்டு போகும்அவர் அன்று சரியான நேரத்துக்கு பாலுக்கு மணியடித்தார். போய் வாங்கி வைத்துவிட்டு திரும்ப வரும் முன் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாத சென்னை நகரத்துவானிலை மிக மோசமாகி மழை தூரலிட்டது."ஐயோ அப்பாவின் யூனிபார்ம் சட்டை....!!!" காலையில் துவைத்து போட்டது ஞாபகம்வர வேக வேகமாய் மூச்சு வாங்க மொட்டை மாடிக்கு ஓடினேன் . நல்ல வேலைரொம்பவும் நனையத் தொடங்கும் முன் கொடியிலிருந்து பிடுங்கி கொண்டு வந்து விட்ட திருப்தியில் உட்புறகொடிகயிற்றில் காயப்போட்டு விட்டு குருவியை தேடிக்கொண்டு மீண்டும் உள்ளேபோனேன் . காணோம் ....! குருவி அங்கே இல்லை ஏய் குருவி அதற்குள்ளே எங்கேபோய் விட்டாய் ? மழை வேறு பலமாய் வரும் போல தெரிகிறது... நனைந்து விட்டால்என்ன செய்வாய் குட்டி பறவையே ? நான் எனக்குள் பேசிக்கொண்டே குருவியைவீட்டுக்கு உள்ளே ... வெளியே என்று கொஞ்ச நேரம் தேடினேன் . காணோம் ...! எங்கும்குருவி இல்லை . ஐந்து மணிக்கு அப்பா வந்து விட்டார் . ஆறு மணிக்கு தாத்தாவந்தார் . குருவி மட்டும் வரவேயில்லை . நான் குருவியை நினைத்துக் கொண்டேஇருவருக்கும் காப்பி போட்டுக் கொடுத்தேன் , வாசல் தெளித்து கோலம் போட்டேன். இரவுக்கு மாவு பிசைந்து கோதுமை சப்பாத்தி போட்டு , தேங்காய் சட்னி வைத்துஇருவருக்கும் கொடுத்து விட்டு நானும் சாப்பிட்டு முடித்தேன் . எங்கே போயிருக்கும்இந்த மழையில் குருவி !!! என்று யோசித்துக் கொண்டே சமைத்து சாப்பிட்டபாத்திரங்களை கழுவி கவிழ்த்தேன் . குருவியை காணவே காணோம் ...! இனிமேலாவரபோகிறது.... மணி ஒன்பது ஆகி விட்டது . அப்பா நைட் சிப்டுக்கு புறப்பட்டுவிட்டார் , தாத்தா வெளித்திண்ணையில் ரேஷன் கடை சேலை விரித்துப் படுத்துவிட்டார் . மழை அது பாட்டுக்குப் பெய்து கொண்டிருந்தது . இரவு வானத்தை மழைமுகமூடிக் கொள்ளைக் காரன் போல கருப்பு துணி போர்த்தி கண்ணுக்குத் தெரியாமல்மறைத்து சாகசம் செய்து விட்ட திருப்தியில் ஆர்பாட்டமின்றி சிறு ஓசையுடன்இறங்கி பூமியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தது . கல்யாணமாகி வருடம் சில கடந்துநிதானமாகி விட்ட தம்பதியர் போல பூமிக்கும் மழைக்குமான சங்கமம் சிறு ரகசியசம்பாசனையுடன் விடியும் வரை தொடர்ந்...தது....!!! குருவி எங்கே போயிருக்குமோ ?மழைக்கு எங்கே ஒதுங்கியிருக்குமோ ? அதன் கூடு எந்த மரத்தில் , எவ்வளவு தூரத்தில்இருக்குமோ ? இந்நேரம் என்ன செய்து கொண்டிருக்குமோ குருவி?குருவி...குருவி...குருவி !!! ஏய் ! குருவி ... சிட்டுக் குருவி...... சிட்டுக்......குருவி ...எங்கேபோய்விட்டாய் என் செல்லக் குருவி ?குருவியை நினைத்துக் கொண்டே தூங்கினாலும் கனவில் என்னவோ குருவி எல்லாம்வரவில்லை ,ஒரு வேளை கனவே வரவில்லையோ என்னவோ ?! காலை டிபன்தயாரிக்கும் அவசரத்திலும் அதென்னவோ அந்த காணமல் போன குருவியை மட்டும்மறக்கவே முடியவில்லை ....இன்றைக்கு மறுபடி வருமோ ? என்ற எதிர்பார்போடு தான்சாதம் வைத்து , சாம்பார் வைத்து ...உருளைக் கிழங்கு வறுவல் செய்து , அப்பளம்பொரித்தேன்.குருவிக்கு இதெல்லாம் பிடிக்குமா ? என்ற யோசனையோடு தான்ஒவ்வொன்றையும் செய்து மூடி வைத்தேன் . மழை நின்று போன விடிகாலையும்வழக்கம் போலத்தான் விடிந்திருந்தது , ஆனாலும் காற்றில் ஒரு ஈரவாடை பரவிமொட்டைமாடியில் துணி காயபோட்டு விட்டு , கட்டைசுவற்றில் கைவைத்து கீழேவிரையும் வாகனங்களைப் பார்த்தவாறு ஆழமாய் மூச்சை உள்ளே இழுத்துமெதுவாய் வெளியேபரவ விடும் போது ஈரத்தோடு ஈரமாய் ஒரு குளிரான சந்தோசம்தேகமெங்கும் சந்தனம் போல அப்பிக்கொள்ளத்தான் செய்கிறது ஒவ்வொருமுறையும் !குருவிக்கு குளிறாதா ? பார்த்தால் கேட்க வேண்டும் ...."வருமா? வந்தால்கேட்க வேண்டும் !!!" என்று கேள்வியை ஓரமாய் மனதில் போட்டு வைத்தேன் . நேற்றுபோல இல்லாமல் பால்கார அண்ணாமலை இன்று பழக்க தோசமாய் லேட்டாகத்தான்வந்தார் ... ஒன்றும் சொல்வதற்கின்றி பேசாமல் பாலை வாங்கி மூடி வைத்தேன் .அம்மாவிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்தது; மாதம் ஒருமுறை அரைமணிநேரம் பேசுவாள் அம்மா , ஏதோ திருவிழா போல துள்ளிக்கொண்டு பேசுவதற்குஓடுவேன் நான் . இன்று அப்படி இல்லை , வெகு நிதானமாய் போய் விட்டு திரும்பியஎன்னை தாத்தா அதிசயம் போல பார்த்துவிட்டு குனிந்து மறுபடி பேப்பர் படிக்கஆரம்பித்தார். அப்பா வந்தார் மறுபடி காபி போட்டேன் , இரவு சமைத்தேன் ,எல்லோரும் சாப்பிட்டோம். இரவு ஷிப்ட் வந்தது .அப்பா கிளம்பி போய் விட்டார் . தாத்தா திண்ணையில் யாரோ நண்பரோடு பேசிகொண்டிருந்தார் , அவர் அப்படியே தூங்கி விடுவார் , இனி உள்ளே வரமாட்டார் ,தண்ணீர் முதலிலேயே சொம்பில் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்வார் .சின்ன வீடு தான் .... ஆனாலும் தனிமை ...ருஷியானதா ?... எப்போதும்தனிமை ....ருஷியானதா...?!பெரிய பங்களா வீடெல்லாம் கழுத்து வரை கடனோடு ஊரில் இருக்கிறது .... கோயில்கோபுரத்தில் அரக்கி போன்ற தோற்றத்துடன் கத்தி பிடித்து நிற்கும் காவற்காரிபொம்மை போல பாட்டி அங்கே இந்நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு தான்இருப்பாள் என நினைக்கையில் நெஞ்சுக்குள் பிசைகிறது ,தாத்தா .... பாவம் ?அப்பா .... பாவம் தான் ?அம்மா ...அவளும் கூட பாவம் தானே ? !அப்படியானால் நான் ???!!!அந்த குருவி... ?!தூரத்தில் எங்கேயோ பாட்டு சத்தம் ... "சிட்டுக்குருவி ....சிட்டுக்குருவி ...சேதிதெரியுமா ? என்னை விட்டு பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை ..."ஏய் குருவி...சிட்டுக் குருவி உன் ஜோடியத்தான் கூட்டிகிட்டுநீ இங்கே வந்து கூடு கட்டு ...இன்றைக்கு சிட்டுக் குருவி ஸ்பெஷல் போல ரேடியோவில்கடைசியில் ...எப்போதும் போல் ... ஒற்றையாய் தெளிவான சிந்தனைகள் ஏதுமின்றி தூங்கத்தொடங்கினேன் நா....னு...ம் !!!--------------------------------------------------------------******கயல் ******------------------------------------------------------------

Followers