நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Tuesday, October 21, 2008

எல்லாப் பயணங்களும்...






எல்லா பயணங்களும்


கீழிருந்தே துவங்குகின்றன ...


மேலே செல்லச் செல்ல


தொடரும் வால் போல


நீளும் ஏணிப்படிகள்


படிப்படியாய் தயங்கி


அவ்விடத்தே நிலைத்துவிட


பயணங்கள்


என்றென்றும் துவங்கித் தொடர்கின்றன ...


பயணிகள்


மாறலாம்


பயணங்கள் மாறுவதில்லை


எல்லாப் பயணங்களும்


கீழிருந்தே துவங்கித் தொடர்கின்றனவாம் ...!!!
கயல்

5 comments:

said...

கவிதைக்குக் கலர் நல்ல விஷயம்தான்.ஆனால் எழுத்து கண்ணுக்குத் தெரியுமளவு பெரிதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளைத் தரும் பொதுக் கவிதை. காவிக்கு என்ன அர்த்தம்...ஒரு வெறுமை அல்லது வறட்சி என வைத்துக்கொள்ளலாமா..?எனது கவிதைப் புரிதல் அவ்வளவுதான்.

டெம்ப்ளேட்டை இன்னும் சரி பண்ணுங்கள்.வேர்டு வெரிஃபிகேஷனை முடிந்தால் தூக்கவும்.

said...

டியர் தமிழ்பறவை
உங்களது கருத்துக்களுக்கு நன்றி .
காவி என்பது நிதர்சனத்தையும் காட்டக் கூடிய ஒரு வண்ணம் ..நிறம் ,
இது இப்படித்தான் என்று சில விஷயங்களை நம் வாழ்வில் மாற்றிக் கொள்ளவே முடியாமல் நிலைத்துப் போனவை எல்லாமே நிதர்ச்சனமே , அந்த நிதர்ச்சனத்தை என் கவிதையில் சொல்ல நினைத்த முயற்ச்சியே காவி நிறத்தை பிரதிபலிக்கும் இக்கவிதை, காக்கை கருப்பு நிறம் என்பது நிதர்ச்சனம் ,
பால் வெண்மை நிறம் என்பதும் அப்படியே ,
அதேபோலத்தான் காலச் சக்கரத்தின் சுழற்ச்சியில் பயணிகள் மாறிக் கொண்டே இருக்கிறோம். வேர்டு வெரிஃபிகேஷனை பற்றி எதோ சொல்லி இருந்தீர்கள் எனக்கு போதிய மென் பொருள் ஞானம் இல்லை ... சாப்ட்வேர் நண்பர்கள் யாரிடமாவது தான் கேட்க வேண்டும் ,உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளாக் எப்படி இருந்தால் படிபவர்களுக்கு சௌகர்யமாக இருக்குமென்று .

said...

//அதேபோலத்தான் காலச் சக்கரத்தின் சுழற்ச்சியில் பயணிகள் மாறிக் கொண்டே இருக்கிறோம். //
சரிதான் நிதர்சனமான உண்மை...
to remove 'word verification' go to ur blogger account..
1. u r in 'dash board'
2. click on 'settings'... then u can see many options including 'comments'
3. click on 'comment' option...
4. in 'comments' page, go to 10th option(might be),
//Show word verification for comments?
Yes No//
like this...
5. click 'no'...
6. otherwise readers r thinking to comment...
upto my knowledge, i tried my best...

said...

word verification மாற்றி விட்டேன் தமிழ் பறவை , வேறு எதுவும் மாற்றங்கள் அல்லது பிழைகள் இருந்தாலும் சொல்லலாம் .

said...

நன்றி கயல்...
வேர்டு வெரிஃபிகேஷனை நீக்கியதற்கு. நானும் சாஃப்ட்வேர் ஆள் இல்லை என்பதால் தொழில்நுட்பம் அதிகம் தெரியாது(எனது பதிவையே தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை).
நீங்கள் புதியவர் என்பதால் சொல்கிறேன்.'கமெண்ட் மாடரேஷன்' எனபிள் செய்து விடுங்கள்.அப்படிச் செய்தால், உங்களுக்கு வரும் க்மெண்டுகள் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் தளத்தில் வெளியாகாது,
like the previous way go to 'comments' page and see the option before 'word verification' and click there 'always' option. then all the comments will come to ur e mail. then if u wish oly, they will be published.
எழுத்துக்களை 'ஃபான்ட்' சைஸ் பெரிது படுத்துங்கள்.

Followers