நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Wednesday, October 22, 2008

ஸ்ட்ராபெர்ரி தெரியும் அதென்ன கிரேன்பெர்ரி ?

இதுவும் ஸ்ட்ராபெர்ரி போல ஒரு பழ வகை தான் , இங்கே இந்தியாவில் இது நிறையக் கிடைக்குமா என்ன என்பதெல்லாம் தெரியவில்லை ,ஆனால் "பெரும்பாலும் பெண்களுக்கு வரும் "சிஸ்டைடிஸ்" எனும் உபாதைக்கு இது ஒரு மிகச் சிறந்த நிவாரணி என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது .இதை ஜூஸ் செய்தும் குடிக்கலாம் ...மாத்திரை பட்டைகளாகவும் கிடைக்கும் .சிஸ்டைடிஸ் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை ...ஆண்களும் பாதிக்கப் படலாம் , எல்லா வயதினரையும் ithu தாக்கலாம் .பெரும்பாலும் பெண்கள் இருபது முதல் ஐம்பத்து வயது வரை இதனால் பாதிக்கப் படுகின்றனர் .ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் அளவற்ற எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது அடிவயிற்றில் வலி இருந்தாலோ ...கலங்கலான நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டாலோ ...சிறுநீருடன் ரத்தம் கலந்து வந்தாலோ , அல்லது இந்த அறிகுறிகளுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அவஸ்தை ஏற்பட்டாலோ ஒருவர் ஆணோ அல்லது பெண்ணோ சிஸ்டைடிஸ் உபாதையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம் .இந்நோய் பெரும்பாலும் இ . கோலி எனும் பாக்டீரியாவால் தான் பரப்பப்படுகிரதாம் . இது சிறுகுடல் பகுதியில் காணப்படும் . பெரும்பாலும் சுத்தமின்மை காரணமாகவும் , உடலில் ஏற்ப்படும் நீர் இழப்பின் காரணமாகவுமே இந்த பாக்டீரியா உடலில் கிட்னி கும் கூடப் பரவ வாய்ப்பு ஏற்படலாம் . சரி...சரி .இப்படியே நீட்டிக் கொண்டு இன்னும் பத்துப் பக்கங்கள் கூட எழுதலாம் தான் ... கிரான்பெர்ரி என்ற பெயர் புதிதாக இருக்கிறதே என்று நெட்டில் தேடினால் இப்படி ஒரு பயனுள்ள விஷயம் சிக்கியது .இந்தப் பழங்களில் சிட்ரிக் அமிலம் அபிரிமிதமாக இருப்பதால் இது இந்த உபாதையைத் தீர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது அவ்வளவு தான் மேட்டர் !!!கிரேன் பெர்ரி கிடைத்தால் சரி தான் .

4 comments:

said...

கயல், பயனுள்ள தகவல். பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி

said...

THANKS V.M

said...

நீங்க பெர்ரி கேள்விப்பட்டதில்லை. இது எங்கு கிடைக்கும்.

said...

ஸ்ட்ராபெர்ரி சில டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும், எல்லா பழக்கடைகளிலும் கிடைக்குமே ,கிரேன் பெர்ரி இந்தியாவில் விளைகிறதா என்று தெரியவில்லை .

Followers